Breaking

உங்கள் தலையில் வட்டம் வட்டமாக இருப்பது தான் புழுவெட்டை...அதை தவிர்க்கும் வழிமுறைகள்..





உங்கள் தலையில் வட்டம் வட்டமாக இருப்பது தான் புழுவெட்டை...அதை தவிர்க்கும் வழிமுறைகள்..

புழுவெட்டு எனும் நோய் முடி இருக்கும் இடங்களில் வட்ட வட்டமாக முடியை உதிரச்செய்யும் நோயாகும். தலைமுடி, மீசை, தாடி மற்றும் புருவமுடிகளைக் கூட தாக்கும் இயல்புடையது.ஆரம்பத்தில் சிறிய பொட்டு போல உருவாகி,நாணய வடிவாகி,பரவி உடலிலுள்ள அனைத்து முடிகளையும் உதிரச் செய்யும் தன்மையுடயது.

புழு வெட்டு அலோபீசியா 

 Alopecia Homoeopathic treatment 

புழு வெட்டு (அலோபீசியா ஏரியேட்டா – Alopecia Areata)

புழு வெட்டு எனப்படும் அலோபீசியா ஏரியேட்டா – Alopecia Areata, முடி வேர்காலில் ஏற்படும் நோய் எதிர்ப்புதிறன் குறைபாட்டால் வருவதாகும். 

இது பொதுவாக தலையில் ஏற்படும். தாடி மீசையையும் தாக்கலாம்.
இது பொதுவாக வட்டவடிவமாக பூச்சி அரித்தது  போல காணப்படுவதால் புழுவெட்டு எனப்படுகிறது 

திட்டு திட்டாக முடி உதிர்வது, ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது.

புழுவெட்டு வகைகள் (Types of Alopecia Areata)

1.அலோபீசியா ஏரியேட்டா (Alopecia Areata) - திட்டு திட்டாக முடி உதிர்வது, ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது.

2.அலோபீசியா பார்சியாலிஸ் (Alopecia Partialis) – பாதி பகுதியாக முடி கொட்டுவது.

3.அலோபீசியா பார்பே (Alopecia Barbae) – தாடியிலோ மீசையிலோ ஏற்படும் புழு வெட்டு.

4.அலோபீசியா டோட்டாலிஸ்(Alopecia Totalis) – தலையிலோ, மீசையிலோ தாடியிலோ முழுவதுமாக முடி உதிர்ந்து போகுதல்.

5.அலோபீசியா ஒபியாசிஸ்(Alopecia Ophiasis) – தலையின் பின்புறமிருந்தோ, காதின் ஓரத்திலிருந்தோ முடி உதிர்தல்.

6.அலோபீசியா டிப்யூஸா(Alopecia Diffusa) – பரவலாக முடி உதிர்தல்.

7.அலோபீசியா யுனிவர்சாலிஸ்(Alopecia Universalis) – உடலின் எந்த ஒரு பகுதியிலும் முடி இல்லாமல் உதிர்ந்து போகுதல்.

அறிகுறிகள்:-

  சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வட்ட வடிவமாக காணப்படும்.

  சிலருக்கு சரி பாதி அளவு முடி உதிர்ந்து காணப்படும்.

  சிலருக்கு பரவலாக முடி உதிரும், ஆனால் வழுக்கையாக காணப்படாது.

  ஒருசிலருக்கு புழுவெட்டில் அரிப்புடன் கூடிய பொடுகும் காணப்படும் (Psoriatic Alopecia Areata).


  இது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த நோயினால் தாக்கப்படலாம்.

  சிலருக்கு சில தினங்களில் தானாக முடி வளர்ந்துவிடும். சிலருக்கு முறையான சிகிச்சை எடுத்தால் மட்டுமே முடி வளரும்.


  இந்த நோயானது உயிருக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. ஆனால் சமுதாயத்தில் மற்றவர்கள் முன்பு செல்லும் போது அடுத்தவர் பார்க்கும் விதத்தினால் மன அழுத்தமும் தன்மீது வெறுப்பும் தோன்றும். இதனால் இவர்கள் விஷேசங்களில் கலந்து கொள்வதையும் உறவினர்கள் வீட்டிற்கு செல்வதையும் தவிர்த்து விடுவார்கள். முறையான சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் இவர்களுக்கு நன்கு பலனலிக்கும்.

சிகிச்சை முறைகள்

நவீன மருத்துவ முறையில் ஸ்டீராய்ட் மருந்துகளை மேற்பூச்சாகவும் மாத்திரைகளாவும் பரிந்துரைப்பார்கள் ஊசி மூலமாகவும் செலுத்துவார்கள். ஆனால் ஸ்டீராய்ட் உபயோகிப்பதனால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.

நாட்டு வைத்தியத்தில் நிறைய முறைகளை பரிந்துரைப்பார்கள். வெங்காயம், பூண்டு, துமட்டிக்காய் முதலியவற்றை மேற்பூச்சாக தடவ சொல்வார்கள், சிலருக்கு இது பலனலிக்களாம். இதன் மூலம் தலையில் புண் கூட ஆகலாம். இந்த முறைகள் அலோபீசியா ஏரியேட்டாவின் அடிப்படை காரணமான நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தாது.

ஹோமியோபதி சிகிச்சை:-

ஹோமியோபதி மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்புதன்மை அதிகப்படுத்தப்படுவதால் ஹோமியோபதி சிகிச்சை அலோபீசியா ஏரியேட்டாவிற்க்கு சிறந்த பலனலிக்கும்.

No comments:

Powered by Blogger.