Breaking

பழைய சோறு மகத்துவமும், மருத்துவமும் பற்றிய சிறப்புக்கட்டுரை..!








பழைய சோறு மகத்துவமும், மருத்துவமும்..!


அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... ‘உங்கள் ஆரோக்கியத்திற்கு காரணம் என்ன?’ என்று. சட்டென்று ‘பழைய சோறும், கம்பங்களியும்தான்’ என்று பதில் சொல்வார்.
 பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல் நலத்திற்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டு களாக பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம், நம் பாரம்பரியத்துக்கு உண்டு. ஆனால் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு களால் பழைய சோற்றின் மகத்துவம் இளைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, இளைய தலைமுறையினரும் பழைய சோறு உணவை விரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பெருமைகளை பட்டியலிட்டதுதான் காரணமாக அமைந்தது. அதன் பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது. ஓட்டல்களில் பழைய சோறு கேட்டு வாங்கி சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். இன்று பழைய சோறு என்ற உணவை நம்பி மட்டுமே பல புதுப்புது ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. அப்படி டிரெண்டிங்கில் வைரலாகியிருக்கும் பழைய சோறு பற்றிய பல விஷயங்கள்..



அவை இதோ...

அமெரிக்கர்களால் அதிகம் தேடப்பட உணவு செய்முறையில் பழைய சோறும் முக்கிய இடம் வகிக்கிறது.அமெரிக்காவில் இருக்கும் ஓட்டல்களில், பழைய சோறு உணவும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ஒருசில இடங்களில் பழைய சோறு விற்பதற்கு என பிரத்யேக ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கும் தமிழர்களிடம், பழைய சோறு செய்முறை கேட்பதற்காகவே பலர் நட்பு பாராட்டுகிறார் களாம்.பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.இதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சினைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகம் உள்ளது.தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.



பழைய சோற்றுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கர்கள் விரும்பும் காலை உணவு, இட்லி.எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் பழைய சோறு விரட்டுகிறது.உடல் சூட்டை குறைக்க அருமையான மருந்து, பழைய சோறுதான்.இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சினையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி சிறந்தது என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.தமிழர்களின் பாரம்பரிய காலை உணவாக இருந்த பழைய சோறு, அநேக வீடுகளில் காணாமல் போய்விட்டது. இனியாவது பழைய சோற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, தினமும் உட்கொள்ள முடியாவிட்டாலும், வாரத்திற்கு மூன்று முறையாவது உட்கொள்ள முயற்சிப்போம்.


No comments:

Powered by Blogger.