Breaking

நீங்கள் கண்ணீர் விட்டு அழுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.?





நீங்கள் கண்ணீர் விட்டு அழுவதால்  கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.?

2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அழுவதால் உடலளவிலும் மனதளவிலும் வலி நீங்குவதாகக் கூறியுள்ளது.

வலியால் அழும்போது கண்ணீரில் சுரக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்ஃபின்ஸ் மனதிற்கு அமைதியையும், வலியைத் தாங்கக் கூடிய வலிமையையும் அளிப்பதாகக் கூறியுள்ளது.

அழுவதால் உண்டாகும் நன்மைகள்:

😢அழுது கண்ணீர் வெளிப்படும் போது கண்ணில் உள்ள அழுக்குமற்றும் இமைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் நஞ்சுகள்வெளியேறுகிறது. கண் பார்வைமேம்படுகிறது.

😢 அழுகையை அடக்கி மன அழுத்தம்அதிகமாகி இரத்தக் கொதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது இதய நோய்க்கு வழி செய்யும்.


😢 அழும் போது மாங்கனீஸ் என்ற கனிமச் சுரப்பு குறைவதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பிறக்கும்.இந்த மாங்கனீஸ்என்ற கனிமம் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

😢 கண்ணீரில் உள்ள லைசோசோம். இது கண்ணில் இருக்கும் 90 – 95% பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் வாய்ந்த திரவம் ஆகும்.

😢 உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி தன்னம்பிக்கை அதிகரிக்க செய்கிறது. மனம் விட்டு அழுத பின்பு தன்னம்பிக்கை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

😢 இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சிறந்த வழியாக திகழ்கிறது அழுகை. நீங்கள் அழுத பிறகு, உங்கள் உடலின் இரத்த அழுத்தம் சம நிலைக்குதிரும்புகிறது. 

உங்கள் உடலை இளகிய நிலையில் உணரவும் இது பயன் தருகிறது.

அதனால் முடிந்த வரை அழுகை வரும் போது அடக்காமல் மனம் விட்டு அழுவதே நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

No comments:

Powered by Blogger.