Breaking

மண் சட்டியில் சமைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம்






மண் பாத்திரங்கள் உணவில் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் என்பதால் அவற்றை சமைத்து சேமித்து வைக்கும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப் போகாது மண் பாத்திரங்களை தண்ணீரில் கழுவும் பொழுது அதன் கண்களில் நீர் தேங்கி சமைக்கும் பொழுது அது ஆவியாகி வெளியேறும் தவிர உணவில் உள்ள சத்துகள் ஆவது தடுக்கப்படும் மேலும் மண் சட்டியில் உணவு சீக்கிரம் வெந்து விடும் என்பதால் உணவில் உள்ள சத்துகள் ஆவியாகி வெளியேறி வெளியேறாமல் உடலிலேயே தங்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 
மண்சட்டியில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவு என்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படாது உலோக பாத்திரங்கள் போல அமிலத்தன்மை பாதிப்பு மண்சட்டியில் இல்லை என்பதால் செரிமான பிரச்சனை ஏற்படாது .உணவுக் குழாய்க்கு உகந்ததாக அமையும் உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது என்பதால் உடல் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.


 மண் சட்டியில் இருந்து நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை சேர்க்கும் மண்சட்டியில் சமைக்கும் பொழுது உணவுப்பொருள் சக்தியும் கொண்டது என்பதால் அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டி இருக்காது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் புதிதாக வாங்கி வந்த மண் பாத்திரங்கள் இரண்டு நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவி வெயிலில் வைத்து எடுத்த பின்னரே சமையலுக்கு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் மண் சட்டியில் உள்ள துகள்களின் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் தங்க வாய்ப்புள்ளது என்பதால் மண்சட்டியை தேங்காய் பயன்படுத்தி சாம்பல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் அலசி வெயிலில் உலர வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும் ஒரு முறை வெப்பமான மண்பாத்திரம் நீண்ட நேரம் அந்த வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பதால் ஒரே பாத்திரத்தை அடுத்தடுத்து வெவ்வேறு உணவுகளைச் சமைக்கப் பயன்படுத்தலாம்..

No comments:

Powered by Blogger.