Breaking

உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது? ஆச்சரிய காரணங்கள்....




உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?


மூளையை ஏய்த்தல்
நடத்தை உட்பார்வை குழுவானது பிரிட்டன் மக்கள் கலோரியை கணக்கில் வைத்துக்கொள்வதில் சரியாக செயல்படுவதில்லை என்றும் இதனால் 30 -50% உணவு குறைவாக மதிப்பிடப்படுகிறது எனக் கூறியுள்ளது.
நடத்தை விஞ்ஞானி ஹியூகோ ஹார்ப்பர், கலோரியை கணக்கிடுவதை விட உணவு உண்ணும் நடத்தையில் மாறுதல்களை கொண்டு வர பரிந்துரைக்கிறார்.
உதாரணமாக, விழிப்புணர்வுடன் தன்னம்பிக்கை கொண்டிருப்பதை விட உணவை பார்ப்பதால் வரும் காட்சி தூண்டுதல்களை நீக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆகவே ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை உங்களது சமையலறையில் வைக்காதீர்கள். பழம் அல்லது ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை வைத்திருங்கள்.
தொலைக்காட்சி முன்னர் முழு பிஸ்கட் பாக்கெட்டுடன் உட்காராதீர்கள், எத்தனை உங்களுக்கு வேண்டுமோ அதனை எண்ணி உங்களது தட்டில் வைத்து எடுத்துச் சென்று அமருங்கள் ஒட்டுமொத்தமாக தவிர்க்க முயற்சி செய்வதை விட குறைவான கலோரி உள்ள உணவுகளை மாற்றாக எடுத்துக் கொள்வதை மருத்துவர் ஹார்ப்பர் ஊக்குவிக்கிறார்.
சாப்பிடும் உணவு 5 - 10% அளவுக்கு மட்டும் குறைந்தால் மக்கள் அதனை குறிப்பிட்டு கவனிக்கமாட்டார்கள். சிறிய அளவிலுள்ள தட்டுகளை பயன்படுத்துவது கவனக்குறைவாக அதிக கலோரிகளை உண்ணுவதை தவிர்க்க உதவும் என்கிறார் ஹார்ப்பர்.

No comments:

Powered by Blogger.