Breaking

புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கும் காளான்கள் பற்றி அறிவோம்.





ஆண்கள் வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் காளான் சேர்த்துக்கொண்டால்  புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை தவிர்க்கலாம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவு இண்டர்நேஷனல் ஜர்னல் ஆப் கேன்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

40 முதல் 79 வயதுக்குட்பட்ட ஆண்கள் 36,499 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை உணவில் காளானை சேர்த்துக்கொண்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு எட்டு சதவீதம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 

அதேவேளையில் வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேளைகளில் காளான் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புக்கான அபாயம் 17 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


ஜப்பானிலுள்ள டோஹோகு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலும் காளான் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் என்பது தெரியவந்திருக்கிறது.

No comments:

Powered by Blogger.