Breaking

கேஸ் சிலிண்டர் உபயோகிக்கும் அனைவருக்கும்... பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்...





கேஸ் சிலிண்டர் உபயோகிக்கும் அனைவருக்கும்...
பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்...


செய்யக்கூடாதவைகள்:-

❌ கேஸ் அடுப்பபை ஜன்னல் அருகே வைக்க கூடாது-
சில சமயங்களில் வீசும் அதிக காற்றினால் அடுப்புஅணைந்து விட வாய்ப்பு உள்ளது.

இப்படிப்பட்ட சமயங்களில் கேஸ் லீக் ஆகி விபத்துக்கள் ஏற்படலாம்.

❌ அடுப்பில் உணவை வைத்துவிட்டு வெளியே செல்ல கூடாது-
சிலர் அடுப்பில் பால் போன்ற பொருட்களை கொதிக்க வைத்து விட்டு, டிவி பார்ப்பது, கதை பேசுவது என வேறு செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இதன் காரணமாக அந்த உணவு பொருட்கள் பொங்கி, நெருப்பு அணைவதால் கேஸ் வெளியேறி விபத்துக்கள் ஏற்படலாம்.

❌ கேஸ் அடுப்பு அருகே மின் சாதனங்கள் வைக்க கூடாது-கேஸ் அறைமுழுவதும் பரவ வாய்ப்பிருக்கிறது. அந்த சமயங்களில் சிறு தீப்பொறி ஏற்பட்டாலும் பேராபத்து நிச்சயம். இதன் காரணமாக மின் சாதனங்களை கேஸ் அடுப்பு அருகே வைக்க கூடாது.

பூஜை அறை அருகே, சமையல் அறை கட்ட கூடாது-
பூஜை அறையில் எப்பொழுதும் விளக்கு, பத்தி போன்ற பொருட்கள் எரிந்து கொண்டிருப்பதால், கேஸ் கசிந்த உடனேயே விபத்து ஏற்பட வழிவகுக்கும்.


செய்யக்கூடியவைகள்:

👍 தினமும் தூங்க செல்வதற்கு முன், கேஸ் இணைப்பின் ரெகுலேட்டரை ஆப் செய்ய வேண்டும்.

👍 கேஸ் சிலிண்டரை காற்றோட்டமான இடத்தில வைக்க வேண்டும்.

👍சிலிண்டர் நிறுவனங்கள் கொடுக்கும் தரமான, ரெகுலேட்டர் மற்றும் டியூப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

👍சிலிண்டரை தயாரான தேதி, ஆயுட்காலம் முடியும் தேதி ஆகியவற்றை கவனித்து பெற்று கொள்ள வேண்டும்.
வருடம் ஒருமுறை, கேஸ் சிலிண்டர் மெக்கானிக்கை அழைத்து, இணைப்பை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

No comments:

Powered by Blogger.