Breaking

நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பதால் உடலுக்கு ஏற்படும் கேடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்....




நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பதால் உடலுக்கு ஏற்படும் கேடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்....

சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்துவிட்டு நான்-ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். 

நான்-ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்துவதில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளன.

நான்-ஸ்டிக் பாத்திரமானது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோ ஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது. 

இந்த அமிலம் கார்சினோஜென் என்னும் புற்றுநோயை உண்டாக்கும் காரணப்பொருள் கொண்டது.

நான்-ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுப் புகையை வெளியேற்றி, உடலில் பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது.


பெர்ப்ளூரோ ஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போ-தைராய்டிசத்தைத் தூண்டும்.

அன்றாடம் நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும்.

தொடர்ச்சியாக நான்-ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும்.

அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவையும் எளிதில் ஏற்படுத்திவிடும்.மாரடைப்பு ஆய்வு ஒன்றில், நான்-ஸ்டிக்கில் உள்ள அமிலம் உடலில் ட்ரைகிளிசரைடு[2] அளவை அதிகப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் ட்ரை கிளிசரைடு அளவு அதிகரித்தால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம் இருக்கும்.

இனப்பெருக்க பிரச்சனை தற்போது தம்பதியர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாததற்கு காரணம், அவர்கள் நான்-ஸ்டிக் பாத்திரத்தில் உணவை சமைத்து உண்பது என்றும் சொல்லலாம்.(முழுக் காரணமும் இது அல்ல. ஆனால் இதன் பங்கும் உள்ளது)

குறிப்பாக நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவை பெண்கள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதிலும், குழந்தை பிறப்பு குறைபாட்டுடன் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளது.

No comments:

Powered by Blogger.