Breaking

சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற அகத்திக்கீரை சூப்..



தேவையான பொருட்கள் :

அகத்திக்கீரை – 1 கப்
வெங்காயம் – 1
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயத்தை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், அதில் வெங்காயம், சீரகம், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் அதில் அகத்திக்கீரையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
தண்ணீர் 2 கப்பாக வற்றியதும் வடிகட்டி பருகவும்.
சத்தான அகத்திக்கீரை சூப் ரெடி.

No comments:

Powered by Blogger.