Breaking

மாணவர்களுக்கான சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் ஒற்றுமை/வேறுபாடு பற்றி அறிந்து கொள்வோம்..





குடியரசு தினம், சுதந்திர தினம் இரண்டுக்கும் என்ன ஒற்றுமை என்று இப்போதைய குழந்தைகளிடம் கேட்டால் இரண்டு நாட்களுக்கும் பள்ளியில் விடுமுறை தருவார்கள், அன்று காலை கொடியேற்றி மிட்டாய் தருவார்கள் என்ற பதில் பெரும்பாலானோரிடம் இருந்து வரும்.

சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் வேறுபாடு என்னவென்றால் நம்மில் பலரே குடியரசு தினம் ஜனவரி மாதமும் சுதந்திர தினம் ஆகஸ்ட் மாதமும் கொண்டாடப்படுகிறது என்றே பதில் கூறுவோம் ஆனால் சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது என்பதுதான் உண்மை.

சுதந்திர தினம்
சுதந்திர தினம் இந்தியாவை முற்று முழுதாக விட்டு விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய தினம். சுந்திர காற்றை நாம் முழுமையாக சுவாசித்த தினம். வாழ்வையும், வாழ்வுக்கு மேலாக உயிரையும் கொடுத்து நம்மவர்கள் போராடி போராடி பெற்ற சுதந்திரம் அது. இனிமேல் அந்நியன் நம்மை ஆழ முடியாது என்ற நிலையை உருவாக்கிய தினம் அது. இப்படியாக 1947- ம் ஆண்டு மாதம் 15 ம் தேதி பிறந்த அந்த மணித்துளிகளில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தோம். அன்றுமுதல் நமது பெருமை மிகு இந்தியாவின் சுத்திர தினம் ஆகஸ்ட் 15 என்று பெருமகிழ்வோடு கொண்டாடி வருகிறோம்.

குடியரசு தினம்

குடியரசு தினத்தை நமக்கு சுதந்திரம் கிடைத்த 3-வது ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறோம். அதாவது 1950 ஜனவரி 26- முதல் கொண்டாடி வருகிறோம். ஏன் ஜனவரி 26- என்றால் 1946-ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்று அமைக்கப்படுகிறது. இதற்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்கிறார். பின்னாளில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இவரே இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழுத் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்படுகிறார்.


No comments:

Powered by Blogger.