Breaking

ஏப்ரல்-29. சோவியத் உக்ரேனிய வானியல் வல்லுநர்-நிகோலாய் பவ்லோவிச் பாராபோசவ் மறைந்த தினம்.






இன்று நினைவு நாள்:- ஏப்ரல்-29.


 சோவியத் உக்ரேனிய வானியல் வல்லுநர்-நிகோலாய் பவ்லோவிச் பாராபோசவ் மறைந்த தினம்.

பிறப்பு:-

இவர் ரஷ்யாவில் மார்ச்-30, 1894 இல் பிறந்தார்.


இவர் உக்கிரைனில் உள்ள கார்க்கிவ் பல்கலைக்கழகத்தில் 1919 இல் பட்டம் பெற்றார்.

கார்க்கிவ் வான்காணக இயக்குநராக 1930 இல் பணியாற்றினார்.

இவர் 1934 இல் கார்க்கிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். 

 இவர் 1943 முதல் 1946 வரை கார்க்கிவ் பல்கலைக்கழக் காப்பாளர் (Rector) ஆக இருந்தார்.

இவர் 1948 இல் உக்கிரைனிய சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினர் ஆனார்.



கண்டுபிடிப்புகள்:-

1961 ஆம் ஆண்டில் நிலவின் தொலைதூரப் பகுதியின் முதல் படங்களின் வெளியீடுகளின் தரவரிசையில் அவர் இணை ஆசிரியராக இருந்தார்.

இது நிலாவின் மறுபக்க நிலப்படம் எனப்பட்டது. (அட்லஸ் ஆஃப் த, தி அதர் சைட் ஆஃப் த மூன் என்று அழைத்தார்.)

சிறப்புகள்:-


செவ்வாயில் உள்ள பரபாசொவ் குழிப்பள்ளம் 1973 இல் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. 

சோவியத் வானியலாளர் நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்கால் கண்டுபிடிக்கப்பட்ட 2883 பரபாசொவ் எனும் சிறுகோளுக்கு 1978 இல் இவரது பெயர் இடப்பட்டுள்ளது.





விருதுகள்:-

சோசலிச தொழிலாளர் கட்சி விருது.

லெனின் நான்கு ஆணைகள் விருது,

தொழிலாளர் ரெட் பதாகையின் ஆர்டர் விருது.

மறைவு:-

ஏப்ரல்-29, 1971 இல் மறைந்தார்.

No comments:

Powered by Blogger.