Breaking

மே-01. நோயியல் நிபுணர், தசைக்கூறு ஆராய்ச்சியாளர், நவீன நரம்பியல் துறையின் தந்தை- சான்டியாகோ ரமோன் கஸல் (Santiago Ramon Cajal) பிறந்த தினம்.






இன்று பிறந்த நாள்:- மே-01.

நோயியல் நிபுணர், தசைக்கூறு ஆராய்ச்சியாளர்,
நவீன நரம்பியல் துறையின் தந்தை- சான்டியாகோ ரமோன் கஸல் (Santiago Ramon Cajal) பிறந்த தினம்.

பிறப்பு:-

ஸ்பெயினின் பெடில்லா டி அரகான் நகரில் மே-01, 1852 இல் பிறந்தார். 


16 வது வயதின்போது, கல்லறைத் தோட்டத்தில் உள்ள எலும்புகளை தந்தை படம் வரைய பயிற்சி கொடுத்து  உடற்கூறியலில் ஆர்வம் ஏற்பட உதவினார். 

1869 இல், ஸாரகோஸா பல்கலைக்கழகத்தில்  மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.   

தலைசிறந்த மாணவருக்கான விருதை வென்றார். 

1873-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.


ஸாரகோஸா பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியர், உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அங்குள்ள உடற்கூறியல் அருங்காட்சியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

வாலென்சியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அங்கு உயிரியியல் சோதனைகளுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவி னார். 

ஆராய்ச்சிகள்:-

அழற்சி நோய்கள், காலரா, நுண்ணுயிரியல், எபிதீலியல் செல்கள், திசுக்களின் அமைப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்தார். 

1887-ல் பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

நரம்பியல் திசுக்களை ஆராய்வதற்கான கோல்கீஸ் முறையைக் கற்று, அதை மேம்படுத்தினார். 

மத்திய நரம்பு மண்டலத்தின் நரம்பியல் கட்டமைப்புகள், செல் வகைகள் அவற்றின் கட்டமைப்பு கள், அவற்றின் இணைப்பு குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார். 




‘நியூரான் டாக்ட்ரின்’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட நரம்பு மண்டல கட்டமைப்பு குறித்த இவரது கண்டுபிடிப்புகளுக்காக 1906-ல் இத்தாலிய விஞ்ஞானி கமிலியோ கோல்கியுடன் இணைந்து இவருக்கு உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நூல்கள்:-

 பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் மொழி களில் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

1905-ல் டாக்டர் பாக்டீரியா என்ற பெயரில், ‘வெக்கேஷன் ஸ்டோரீஸ்’ என்ற தலைப்பில் 5 அறிவியல் புனைகதைகளை எழுதி வெளியிட்டார்.

 ஸ்பெயினில் கல்வி, அறிவியல் ஆராய்ச்சிகள் மேம்பாட்டுக்காக ஏராளமான முனைப்புகளை மேற்கொண்டார். உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் பல விருதுகள், பட்டங்கள், கவுரவங்களைப் பெற்றார்.

மறைவு:-

வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்த இவர் 82-வது வயதில், அக்டோபர்-17, 1934 இல் மறைந்தார்.

No comments:

Powered by Blogger.