Breaking

இன்றைய ராசிப்பலன் மே-05..






இன்றைய  ராசிப்பலன் மே-05..

இராகு காலம் மதியம் 03.00-04.30
எம கண்டம் காலை 09.00-10.3
குளிகன் மதியம் 12.00-1.30


மேஷம்
பணவரவு இன்று அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் கொடுத்த கடன்கள் வசூலாகும். பொது நலக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவார்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படலாம்.
உறவினர்களின் மாறுபட்ட கருத்துக்கள் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் சிக்கல்கள் குறையும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். நவீன பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். எந்த வேளைகளிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

கடகம்
பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் அனுகூலம் உண்டு.



சிம்மம்
உடன்பிறந்தவர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். தொழில் தொடர்பாக புதிய செய்திகள் நற்பலனை கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை கொடுக்கும்.

கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபச் செய்திகள் வந்து சேரும்.உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பெண்கள் சிக்கனமாக செயல்பட வேண்டும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுப காரியங்கள் கை கூடும். சேமிப்பு குறையும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலனை பெறலாம்.

விருச்சிகம்
நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். அசையா சொத்துக்கள் வழியாக அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களால் நன்மை உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாகும்.



தனுசு
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெண்களுக்கு வீட்டில் வேலைச்சுமை குறையும். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்
இன்று பிள்ளைகளால் சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உறவினர்கள் கைகொடுத்து உதவுவார்கள். பொறுமையுடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளைத் தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் காணப்படும்.

கும்பம்
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

மீனம்
புதிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

No comments:

Powered by Blogger.