Breaking

மே-08. உலகப் புகழ்பெற்றவரும், புகைப்படத் துறையில் பல கண்டுபிடிப்புகள் வெளியிட்டவர்- எட்வியர்டு மைபிரிட்ஜ் (Eadweard Muybridge மறைந்த தினம்.






மே-08.
உலகப் புகழ்பெற்றவரும், புகைப்படத் துறையில் பல  கண்டுபிடிப்புகள் வெளியிட்டவர்- எட்வியர்டு மைபிரிட்ஜ் (Eadweard Muybridge மறைந்த தினம்.

வாழ்க்கை வரலாறு:-

லண்டனின் கிங்ஸ்டன் பகுதியில் ஏப்ரல்-09,1830 இல் பிறந்தார். 

கல்வி கற்ற பிறகு அமெரிக்காவில் குடியேறியும், முகவராகவும், புத்தக விற்பனையாளராகவும் பணியாற்றினார்.

பிறகு, புகைப்படத் துறையில்  ஈடுபாடு ஏற்பட்டு,  ஏராளமான புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டதால், புத்திசாலி புகைப்படக் கலைஞர் என்று பெயர் பெற்றார். 

புகைப்பட வெளியீடு:-

இவர் ‘ஃபோட்டோ கார்ட்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்ட புகைப்படங்கள் நல்ல விலைக்கு விற்றன.

வடக்கு கலிபோர்னியா மலைப்பகுதியை ஒட்டியுள்ள யோசெமிட்டி பள்ளத்தாக்கின் அழகை பல்வேறு விதமான கோணங்களில் படம்பிடித்து 1868-ல் பிரம்மாண்ட அளவில்  புகைப்படங்கள் வெளியிட்டார்.

 1872 முதல் மோஷன் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார்.

சாதனைகள்:-

1877-ல் கலிபோர்னியா சென்றவர், மோஷன் போட்டோகிராபி குறித்த ஆராய்ச்சிகளைத் தொடங்கி, சிறப்பு ஷட்டர் ஒன்றை வடிவமைத்து, இவர் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பல இதழ்களில் வெளிவந்து.

தனது பிரத்யேக ஷட்டர் உதவியுடன், 4 கால்களும் அந்தரத்தில் இருக்கும் குதிரையைப் படம்பிடித்து வெளியிட்டதால்,  மேலும் புகழைப் பெற்றுத் தந்தது.

நகரும் அல்லது சலனம் கொள்ளும் படத்தை அறிமுகம் செய்தார்.



 விலங்குகளின் லோகோமோஷன் குறித்து அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் விரிவுரை நிகழ்த்தினார்.

1883 முதல் 1886-க்குள் தன் கேமராவில் 10,000 இமேஜ்களை பதிவு செய்திருந்தார்.

பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆதரவுடன் சலனப்படங்கள் குறித்த முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் மனித உருவங்களின் பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியிருந் தன. இது கலைஞர்களுக்கு மட்டுமல்லாது, விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. இந்தப் புகைப் படங்களை உள்ளடக்கிய நூல் ஒன்று 1887-ல் வெளியிடப்பட்டது.

விலங்குகள், மனிதர்களின் அசைவுகள் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். 

மறைவு:-

ஒளிப்படங்களில் பல்வேறு புதுமைகள் புரிந்து, புகைப்படத் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய இவர் மே-08,1904இல், தனது 74-வது வயதில்  மறைந்தார்.

No comments:

Powered by Blogger.