Breaking

ராசிப்பலன் - 08.05.2020.. சித்திரை 25, வெள்ளிக்கிழமை.







ராசிப்பலன் - 08.05.2020.. சித்திரை 25, வெள்ளிக்கிழமை.

இராகு காலம் - பகல் 10.30-12.00

எம கண்டம்- மதியம் 03.00-04.30

குளிகன் காலை 07.30 -09.00

மேஷம்
இன்று உங்களுக்கு மனக் குழப்பமும், கவலையும் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதால் வீண் பிரச்சனைகளை தடுக்கலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும்.

ரிஷபம்
வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.உத்யோகத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்துசேரும். குடும்பத்தில் மன அமைதி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டு.

மிதுனம்
உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டு. கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


கடகம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரத்தின் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடல் நிலை சீராகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். நண்பர்கள் உங்கள் தேவைகளை அறிந்து உதவி செய்வார்கள். தெய்வ வழிபாடு நல்லது. தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடலாம். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நற்செய்திகள் வந்து சேரும்.

கன்னி
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரம் தொடர்பாக இருந்த தடைகள் விலகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

துலாம்
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சனை தீரும்.

விருச்சிகம்
நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.


தனுசு
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சேமிப்பு உயரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உங்களுடைய பிரச்சனைகள் தீர உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்
உங்களுக்கு தன வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழிலில் வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்
பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீன பொருட்களை வாங்க அனுகூலமான நாள். வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் இருக்கும் நெருக்கடிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மீனம்
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கப் பெற்றதால் மனநிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நன்மை நடக்கும்.

No comments:

Powered by Blogger.