Breaking

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1ல் தொடக்கம்!


சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1ல் தொடக்கம்!

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு மேலும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி தேர்வுகள் உட்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நோய் பரவல் காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வியெழுந்து வந்தது.

இதனிடையே சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் எனவும் தேர்வு ஆட்டவணை, தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளார்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஒத்திவைக்கப்பட்டுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சி.பி,எஸ்.இ தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வுகளும் இந்த தேதிகளில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.