Breaking

இன்றைய ராசிப்பலன் - 10.05.2020






10-05-2020, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00

எம கண்டம் - பகல் 12.00 - 01.30

குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30.

ராசிப்பலன் - 10.05.2020

மேஷம்

பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பால் நிம்மதி உண்டு.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகலாம்
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மன அமைதி குறையும்.

மிதுனம்

உங்கள் திறமைகள் இன்று வெளிப்படும். நண்பர்களின் சந்திப்பில் மகிழ்ச்சி உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெறும்.

கடகம்

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.


சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் இதுவரை இருந்த பிரச்சனைகள் மறையும்.

கன்னி

நீங்கள் செய்யும் செயல்களில் தாமதங்கள் ஏற்படலாம். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டு. வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை குறைக்கலாம்.

துலாம்

உற்றார் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் உண்டு. உத்தியோகம் தொடர்பாக வேலைப்பளு அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில் தொடர்பாக நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். கொடுத்த கடன் வசூலாகும்.


தனுசு

எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வருமானம் பெறுவதற்காக வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும். புதிய சலுகைகள் அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள்.

மகரம்

குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். எந்த ஒரு செயலையும் பொறுமையாக கடைபிடிக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.

கும்பம்

நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் சுபநிகழ்ச்சிகள் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும். நவீன பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும்.

No comments:

Powered by Blogger.