Breaking

கற்றல் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய 12 பேர் குழு அமைப்பு.. குழுவில் பங்குபெற்ற பிரதிநிதிகளின் விவரம்







கற்றல் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய 12 பேர் குழு அமைப்பு.. குழுவில் பங்குபெற்ற பிரதிநிதிகளின் விவரம்

பொது முடக்கம் காரணமாக பள்ளிக் கல்வியில் கற்றல் கற்பித்தல் உள்ள பிரச்சனை குறித்து ஆராய குழு பள்ளி கல்வி துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது நாடு முழுவதும் நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதன் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் ஆகியவை முடக்கப்பட்டன ஒரு ஆண்டுக்கு 210 நாட்கள் பள்ளி வேலைநாள் அறிவிக்கப்படுவது வழக்கம் ஆனால்
2019-20 
ஆம் கல்வியாண்டில் கரோணா பாதிப்பு காரணமாக 210 நாட்களுக்கு முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது இதனால் சுமார் 30 நாட்கள் பள்ளி வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது அதேபோன்று ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் ஆனால் கரோணா தொற்று காரணமாக இந்த ஆண்டு ஜூனில் பள்ளிகள் திறக்கப் படாது என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது இதற்கிடையே வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது அதே வேளையில் நோய் தொற்று காரணமாக வரும் கல்வியாண்டில் பள்ளி திறப்பு தேதி தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது இது நிலையில் கடந்த கல்வியாண்டு மற்றும் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் மூடப் பட்டதால் கல்வித்திறன் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது இதனால் கற்றலில் ஏதேனும் குறைபாடு ஏற்படுமா அதனை எப்படி சரி செய்யலாம் பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் எவ்வாறு தடுக்கலாம் போன்ற விஷயங்கள் குறித்து ஆராய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மற்றும் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


 குழுவின் பிரதிநிதிகள் இதில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் சார்பில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்குநர் ,தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், கல்வி தொலைக்காட்சி சார்பில் ஒரு அலுவலர், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஒரு அலுவலர் பிரதிநிதி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சார்பில் ஒரு பிரதிநிதி சென்னை ஐஐடி சார்பில் பள்ளி கல்வி தொழில்நுட்ப குழுவிற்கு பங்களிப்பு செய்தவர்களில் ஒரு பிரதிநிதி என 11 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ்  தலைமையில் செயல்படும் இந்த 15 நாட்களுக்குள் இதுதொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Powered by Blogger.