Breaking

இன்றைய ராசிபலன் பற்றி அறிவோம்.. வைகாசி 13, செவ்வாய்க்கிழமை.





இன்றைய ராசிபலன் பற்றி அறிவோம்..

 வைகாசி 13, செவ்வாய்க்கிழமை.
இராகு காலம் மதியம் 03.00-04.30
எம கண்டம் காலை 09.00-10.30
குளிகன் மதியம் 12.00-1.30.

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் சுப செலவுகள் உண்டாகலாம்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம்.கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் பெற்றோருடன் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். தொழில் தொடர்பாக அரசு உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றம் காணலாம். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

கடகம்

தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். எதையும் சிந்தித்து செயல் படுவது நல்லது. குடும்பத்தை பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.

சிம்மம்

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இன்று இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியை கொடுக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

கன்னி

நற்செய்திகள் உங்கள் வீடு தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி அன்பும், ஆதரவும் மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.


துலாம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நன்மைகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க சிக்கனம் உடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

இன்று தேவையில்லாமல் மனக்கவலைகள் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. சுபநிகழ்ச்சிகளை தவிர்க்கவும்.

தனுசு

நீங்கள் இன்று செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபச் செலவுகள் செய்ய நேரிடலாம். தர்ம காரியங்கள் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை கொடுக்கும்.

மகரம்

வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். வெளிவட்டார நட்புகள் மூலம் அனுகூலமான பலன் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உபயோகத்தில் இருப்பவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். வியாபாரத்தில் இருந்து எதிர்ப்புகள் மறைந்து முன்னேற்றம் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் ஏற்படலாம். உடன் பிறப்பு மூலம் உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

மீனம்

இன்று உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கூடும். ஒரு சில கஷ்டங்கள் உண்டாகலாம். உபயோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும்.

No comments:

Powered by Blogger.