Breaking

200 கி.மீ தொலைவில் இருந்தும் தெளிவாக தெரியும் இமயமலை...






200 கி.மீ தொலைவில் இருந்தும் தெளிவாக தெரியும் இமயமலை...

ஊரடங்கு காரணமாக சுற்றுச்சுழல் மாசு வெகுவாக குறைந்து வருவதை காட்சியளிக்கும் வகையில் 200 கி.மீ தூரத்திலும் இமயமலை தெளிவாக தெரியும் புகைப்படம் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் பலர் தங்களது வாழ்வதாரத்தை இழந்து தவித்து வருவது ஒருபக்கம் இருந்தாலும் சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைந்துள்ளது இயற்கை ஆர்வலர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.



டெல்லி அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்த காற்று மாசு ஊரடங்கு காரணமாக தணிந்துள்ளது. அதேப்போன்று கங்கை நதி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சுத்தமாகி டால்பின்கள் விளையாடும் காட்சிகளும் வெளியானது.
தற்போது நோபாளின் காட்மாண்டு பள்ளதாக்கத்திலிருந்து இமயமலை தெளிவாக தெரியும் புகைப்படத்தை நோபாளி டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் காட்மாண்டு பள்ளதாக்கில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Powered by Blogger.