Breaking

22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.. ஆசிரியர்களுக்கு கற்றல் மதிப்பீடு உட்பட NCERT தகவல்..





22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.. ஆசிரியர்களுக்கு கற்றல் மதிப்பீடு உட்பட

NCERT தகவல்..

பள்ளிக்கல்வியில் 22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த புதிய கல்விக் கொள்கையை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது அதற்கான முன் தயாரிப்பு பணிகள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன்படி நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்ற முடிவானது அந்தவகையில் புத்தகங்களில் சுமையை குறைத்தல் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் புதிய பாடத் திட்டத்தை வடிவமைக்க நிபுணர் குழுவை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உருவாக்கியது புதிய பாடத்திட்டம் மாற்றத்தில் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சில பரிந்துரைகளை அன்மையில் முன்வைத்தது இதையடுத்து இவை வழங்கிய பரிந்துரைகள் மற்றும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்குப்பின் தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது பாலின சமத்துவம் நவீன தொழில்நுட்பங்கள் முன்பருவ கல்வி அடிப்படை கல்வி அறிவு ஆசிரியர்களுக்கான கற்றல் மதிப்பீடு தேர்வு முறைகள் புத்தக சுமை குறைப்பு மாநிலங்களுக்கு ஏற்ப துணைப்பாடம் உட்பட 22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது இப்பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்..

No comments:

Powered by Blogger.