Breaking

ஜூலை 26-ல் நீட் தேர்வுகள் நடைபெறும் : மத்திய அரசு..






ஜூலை 26-ல் நீட் தேர்வுகள் நடைபெறும் : மத்திய அரசு..


ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.நடப்பு கல்வி ஆண்டில் இந்த தேர்வு, மே 3ல் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பிரச்னையால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நீட் நுழைவு தேர்வும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும்.
ஜே.இ.இ., மெயின் தேர்வுகள் ஜூலை 18, 20, 21, 22, 23 தேதிகளில் நடைபெறும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்டில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.