Breaking

இன்றைய ராசி பலன்கள் 28-05-2020, வைகாசி 15, வியாழக்கிழமை.






28-05-2020, வைகாசி 15, வியாழக்கிழமை.

இராகு காலம் - மதியம் 01.30-03.00

எம கண்டம்- காலை 06.00-07.30

குளிகன் காலை 09.00-10.30.



மேஷம்

குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். செலவுகள் உண்டாகலாம். தொழிலில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மந்தமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்கள் பொறுப்புடன் செய்யப்படுவார்கள்.

மிதுனம்

இன்று வரவிற்கு ஏற்ப செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூல பலன் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி குறைவு ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதக பலன் கிடைக்கும்.

கடகம்

உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பாக பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தனவரவுகள் தடையின்றி வந்து சேரும்.


சிம்மம்

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு சக ஊழியர்களால் தடைகள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையை கொடுக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

கன்னி

உங்களுக்கு இன்று திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு. வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன் உண்டு. அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான பலன் கிடைக்கும்.


தனுசு

இன்று உடல் சோர்வுடனும், குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை. மற்றவரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

மகரம்

குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும்.

கும்பம்

தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்

உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும்.

No comments:

Powered by Blogger.