Breaking

இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிந்து கொள்வோம் 29-05-2020, வைகாசி 16, வெள்ளிக்கிழமை.






இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிந்து கொள்வோம்

29-05-2020, வைகாசி 16, வெள்ளிக்கிழமை.

இராகு காலம் - பகல் 10.30-12.00

எம கண்டம்- மதியம் 03.00-04.30

குளிகன் காலை 07.30 -09.00.



மேஷம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டு. வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

நண்பர்களின் உதவியால் கடன்சுமை ஓரளவு குறையும்.குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் அனுகூல பலன் உண்டு.

மிதுனம்

உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நண்பர்களிடம் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

கடகம்

உறவினர்களால் மனக்கசப்புகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைப்பளு குறையும். தொழிலில் எதிர்பார்த்த செலவுகள் உண்டாகலாம்.


சிம்மம்

நீங்கள் எந்த காரியத்திலும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும். வராத பழைய கடன்கள் வசூலாகும். திருமண முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு வேலை தொடர்பாக வெளிவட்டார நட்பு ஏற்படும்.

கன்னி

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும்.தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

துலாம்

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி உண்டாகும். உத்தியோகம் தொடர்பாக பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், உதவியும் மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

விருச்சிகம்

பணவரவு சிறப்பாக இருக்கும். செலவுகள் குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.காரியங்கள் எளிதில் முடியும். வியாபாரத்தில் நண்பர்களை அனுசரித்து சென்றால் நற்பலன் கிடைக்கும்.


தனுசு

வியாபாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடித்தால் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

கும்பம்

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம்

செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய கருவிகள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.

No comments:

Powered by Blogger.