Breaking

இன்றைய ராசி பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.. 31-05-2020, வைகாசி 18, ஞாயிற்றுக்கிழமை.





இன்றைய ராசிி பலன்கள்
பற்றி தெரிந்து கொள்வோம்..
31-05-2020, வைகாசி 18, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00

எம கண்டம் - பகல் 12.00 - 01.30

குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30.

மேஷம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

குடும்பத்தில் பெண்கள் தங்கள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள்.உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடலாம். சிக்கனமாக செயல்படுவதால் கடன் பிரச்சனைகள் குறையும்.

மிதுனம்

பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பண பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் தொடர்பாக செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கடகம்

குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.


சிம்மம்

வீட்டில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மன நிம்மதியை கொடுக்கும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் கைக்கூடும். நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம்.

கன்னி

வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

துலாம்

மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களில் வீண் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிரச்சனையில் இருந்து விடுபட சிக்கனமாக செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

நவீன பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். தொழில் தொடர்பாக வெளி பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. பண வரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.


தனுசு

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குல் இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

மகரம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எதிலும் நிம்மதி இல்லாத நிலை உண்டாகலாம். பொருளாதார தொடர்பாக பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதியத்திற்கு பிறகு நன்மை உண்டாகும்.

கும்பம்

உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மை உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. சுபகாரிய முயற்சிகள் மற்றும் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்

நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

No comments:

Powered by Blogger.