Breaking

தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா..






தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா..

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலருக்கும் பொதுவாக வழங்கப்படும் அறிவுரைகளில் 'அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்' என்பதும் ஒன்று. உண்மையில் இது மிகவும் சுலபமானது தான். தண்ணீர் நம் உடல் உறுப்புகளின் செயலை நன்றாக பார்த்துக் கொள்ளும். அதேபோல நீர்சத்து குறையாமலும் பாதுகாக்கும்.
உண்மையில் தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது கொழுப்பை கரைக்க உதவும் எனவும், நமது எடை குறைய உதவும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர்சத்தும் உடல் எடை இழப்பும்
நாம் உண்ணும் உணவுகளை கலோரிகளாக மாற்றாமல் உடனே ஜீரணிக்க வைக்க தண்ணீர் உதவுகிறது.
அதேபோல நச்சுகளை வெளியேற்றவும் தண்ணீர் பிரதானமான ஒன்று. நாம் உண்ணும் உணவுகளையும், ஏற்கனவே உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளையும் வேகமாக கரைக்க தண்ணீர் அவசியம். 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் பல அற்புதங்களை செய்யும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். தண்ணீர் நமது உள் உறுப்புகளையும் பாதுகாக்கும். ஜீரண வழிகளை சுத்தம் செய்து அதில் தேங்கி இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். ஜீரண உறுப்பு சரியாக செயல்பட்டால் உடல் எடை தானாக குறைய ஆரம்பித்துவிடும். அதேபோல உடல் எடையும் அதிகரிக்காது.


சாப்பிடுவதற்கு முன் தண்ணீர்
நாம் சாப்பிடும் முன் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. அதேபோல சாப்பிடும் அளவையும் அது மாற்றும். சில சமயங்களில் பசி உணர்வு வந்தாலும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தாலே அந்த உணர்வு நீங்கிவிடும். அதிக கலோரிகளை நாம் உட்கொள்ளாமலும் தண்ணீர் தவிர்க்கும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து நாளை தொடங்கும் நபர்கள் மற்றவர்களை விட 44% வேகமாக எடையை இழப்பார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள்.

தாகம் எடுக்கும் போது சர்க்கரை மற்றும் அதிக கலோரிகள் கொண்ட சோடாக்களை குடிப்பதை விட ஜீரோ கலோரி கொண்ட தண்ணீரை குடிப்பது தான் ஆரோக்கியம். உடல் எடை அதிகரிக்க இந்த கலர் சோடாக்கள் முக்கிய காரணமாக அமைகிறது. தண்ணீரில் லெமன் பிழிந்து குடிக்கலாம். ஆனால் சர்க்கரை, உப்பு சேர்க்கக் கூடாது.
தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். தினமும் 8 - 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக்குங்கள். கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது. அதேபோல நீர்சத்து அதிகம் கொண்ட பழங்கலான தர்பூசணி, சாத்துக்குடி, ஆரஞ்ச் ஆகியவற்றையும் சாப்பிடலாம். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். இதையெல்லாம் விட மற்றொரு விஷயம் என்னவென்றால் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சியோ நடைபயிற்சியோ செய்ய வேண்டும்.

No comments:

Powered by Blogger.