Breaking

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இணையதளத்தில் அனுமதிச் சீட்டு..





பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இணையதளத்தில் அனுமதிச் சீட்டு..

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் தேர்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்..
கோபியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது.. அனைத்து உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளும் 10ஆம் வகுப்பு பொது தேர்வு மையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரு தேர்வு அறைக்கு  10 பேர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் மே 21-ஆம் தேதி முதல் தேர்வு பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12,000 பள்ளிகள் தேர்வு மையங்களாக மாற்றப்படுகின்றன தனியார் பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களும், அரசு பள்ளி தேர்வு மையங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வெளியூரில் இருக்கும் தனியார் பள்ளி மாணவர்களை மூன்று நாள்களுக்கு முன்பு அழைத்து வந்து தனியார் பள்ளி விடுதிகளில் தங்க வைத்து தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதற்கு வசதி பெறுவதற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்வு அனுமதிச் சீட்டு இணையதளம் மூலம் வழங்கப்படும் தேர்வு நடைபெறும் நாளில் மாணவர்கள் சுகாதாரம் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது தேர்வு மையங்களில் இப்பணிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்..

No comments:

Powered by Blogger.