Breaking

உடல் எடையை குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்






உடல் எடையை குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய் தான். ரீ-பைன்டு எண்ணெய்களில் அதிகம் கெட்ட கொழுப்புகள் உள்ளதால், அவை உடல் எடையை வேகமாக அதிகரிக்கும். ஆனால் சுத்தமான தேய்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிக உடற்பயிற்சி செய்வதைவிட, சரியான டயட் உடல் எடை வேகமாகக் குறைய உதவும். எடை குறைப்பு முதல் முகத்தை பளபளக்க வைப்பது வரை தேய்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் இ, ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பாலிபெனோல்ஸ் உடல் எடையை அதிகரிக்கும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகின்றன.

அதற்காகக் கடைகளில் பாட்டிலில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லதல்ல. நமக்குத் தெரிந்த கடையில் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைத்தால் அதைப் பயன்படுத்துவது நல்லது.
எவ்வளவு அளவு பயன்படுத்த வேண்டும்
தேங்காய் எண்ணெய் நல்லது என்பதால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு 30 மில்லி அளவே பயன்படுத்த வேண்டும். இது இரண்டு முதல் மூன்று ஸ்பூன் அளவு.
காய்கறிகளை சமைக்கும்போது இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளித்து சமைக்கலாம். அதேபோல ஆலிவ் எண்ணெய்க்கு பதில் சாலட்களில் இதை பயன்படுத்தலாம். காலை நாம் குடிக்கும் டீ அல்லது காஃபியில் சில சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
உடல்நலக் கோளாறு இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் இதை எடுத்துக் கொள்வது நல்லது.

No comments:

Powered by Blogger.