Breaking

ஓய்வு ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம்..ஆலோசனை






ஓய்வு ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம்.. பல கோடி ரூபாய் மிச்சப்படுத்த ஆலோசனை..

பள்ளி கல்லூரிகள் செயல்படாத நிலையில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் செயல்படவில்லை அடுத்த கல்வி ஆண்டில் தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன அதுவரை ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர் இவர்களில் ஒரு பிரிவினருக்கு பணிகள் இல்லை..



அதாவது பத்தாம் வகுப்பு பாடம் எடுக்கும் பட்டதாரி மற்றும் மேல்நிலை வகுப்பு நடத்தும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளன மற்ற ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் புதிய கல்வி ஆண்டு வரை பணிகள் இல்லை இந்த நிலையில் மார்ச்சில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் இந்த கல்வி ஆண்டு முடியும் காலமான மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கல்வி அலுவலகங்களுக்கு கடிதங்கள் வந்தன ஒவ்வொரு அடுக்கும் பள்ளி கல்லூரிகள் செயல்படும்போது ஓய்வு காலத்தை கடந்த கல்வி ஆண்டு முடியும் மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் ஆனால் இந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் செயல்படாததால் பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்ற முடிவுக்கு பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வித் துறை வந்துள்ளது..

No comments:

Powered by Blogger.