Breaking

காளான் முட்டை மசாலா செய்வது எப்படி ...






காளான் முட்டை மசாலா செய்வது எப்படி ...

தேவையான பொருட்கள்

காளான்    1 கப்
பல்லாரி-1    முட்டை-1
பட்டை    1
தனியா தூள்    1 ஸ்பூன்
மஞ்சள் தூள்    ஒரு சிட்டிகை
கிராம்பு-2    தக்காளி-1
சோம்பு    அரை ஸ்பூன்
பூண்டு    2 பல்
கொத்தமல்லி    சிறிதளவு

செய்முறை

பல்லாரி, கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கவும். காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டவும். பூண்டை சிறியதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்து, பின்னர் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.. தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும் காளான் சேர்த்து லேசாக வதக்கவும். காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

No comments:

Powered by Blogger.