Breaking

கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனி தேர்வு மையம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..






கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனி தேர்வு மையம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

கட்டுப்பாடு பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத தனித்தேர்வு மையம் அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது தமிழகத்தில் மார்ச் 24ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கரோணாவால் தடுப்பு நடவடிக்கைகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் பொது முடக்கத்தால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது தற்போது ஜூலை 1 முதல் 12ம் தேதி வரை பொது தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியூர்களில் இருந்து திரும்பி வருவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்து E-PASs பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் கட்டுப்பாட்டுப் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு தனி தேர்வு மையம் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது E- பாஸ் பெறுவது தொடர்பான முழு வழிகாட்டுதலை தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்துவிட்டு E பாஸ் பெற வேண்டிய முழு விவரத்தையும் மாவட்ட கல்வி அலுவலரிடம் நேரடியாக எழுத்து மூலம் மே 21ம் தேதிக்குள் அனுப்பவேண்டும் 100 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் இருப்பின் அவர்கள் விவரத்தை உடனடியாக எழுத்து மூலம் மாவட்ட கல்வி அலுவலரிடம் மே 19ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் அவர்களை. பொதுத் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட கூடாது. அவர்களுக்கான சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்படும் .மேலும் தேர்வு மையமாகவும், துணைத்தேர்வு மையமாகவும் செயல்பட உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகம் வகுப்பறைகள் கழிப்பறைகள் மேஜை நாற்காலிகள் உள்ளிட்டவற்றை ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஒத்துழைப்புடன் கிருமிநாசினி கொண்டு தெரியப்படுத்த வேண்டும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Powered by Blogger.