Breaking

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர், செங்கோட்டையன் எச்சரிக்கை..


தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர், செங்கோட்டையன் எச்சரிக்கை..

கொரோனா ஊரடங்கால், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பெற்றோரிடம், தற்போது கல்வி கட்டணம் கேட்டு, தொல்லை தரக்கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், வரும் கல்வி ஆண்டுக்கு, கல்வி கட்டணம் வசூலிக்க துவங்கியுள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகள் சங்கங்களின் நிர்வாகி, சென்னையை சேர்ந்த, மார்ட்டின் கென்னடி கூறியதாவது:வரும் கல்வி ஆண்டுக்கு, தாமாக கட்டணம் செலுத்த முன் வருவோரிடம், கட்டணம் வசூலிக்க, பள்ளிகளை அனுமதிக்க வேண்டும். கட்டணம் குறித்து, மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், பள்ளி கல்வித்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.