Breaking

இன்று முதல் தமிழகத்தில் எது இயங்கும் ? எது இயங்காது என தெளிவாக பார்த்து விடலாம்.






இன்று முதல் தமிழகத்தில் எது இயங்கும் ? எது இயங்காது என தெளிவாக பார்த்து விடலாம்.

தமிழக அரசின் அறிவிப்பு ( தளர்வுகள் ) அத்தனையும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. மற்ற பகுதிகளுக்கு தான் தளர்வு. தமிழக அரசு என்று சொல்லி இருக்காங்க என்றால் சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதி, சென்னை காவல்துறை உட்படாத மாநிலத்தின் மற்ற பகுதி என இரண்டாக பிரித்து உள்ளார்கள்.
சென்னையில் எது இயங்கும் ?
அத்தியாவசிய பொருட்கள் கடைகள் (காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ) திறந்து இருக்கலாம்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும், அமர்ந்து சாப்பிட முடியாது.
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து தனிக்கடைகளுக்கும் அனுமதி.
என்னென்ன தனிக்கடைகள் :
ஹார்டுவேர் கடைகள்,
சிமெண்ட்,
கட்டுமான பொருட்கள்,
சானிட்டரி வேர்,
எலெக்ட்ரிக்கல் பொருட்கள்,
மொபைல்போன் கடை,
கணிப்பொறி,
வீட்டு உபயோகப் பொருட்கள்,
மின்மோட்டார்,
கண் கண்ணாடி,
பழுது நீக்குதல் கடைகள் இவையெல்லாம் காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிவரையில் திறந்திருக்கலாம்.
எது இயங்கும் ?
பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் ஆகிய சுயத்திறன் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் / மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று பணி செய்யலாம்.
சென்னையை தவிர பிற பகுதிகள் :
அனைத்து தொழிற்சாலைகளும், அதாவது 50 சதவிகித பணியாளர்களை கொண்டு இயங்கலாம்,
ஹார்டுவேர் உற்பத்தி,
நூற்பாலைகள் இவையெல்லாம் இயங்கலாம்.
நகர்ப்புறங்களில் கட்டுமானப் பணியாளர்கள் தங்கி வேலை செய்தால் அனுமதி உண்டு.
ஒருமுறை மட்டும் வேறு இடத்திலிருந்து பணியாளர்களை அழைத்து வர அனுமதி.
கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்ட்வேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிட்டரி வேர், மின் சாதன விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை.
அனைத்து தனிக் கடைகள் :
இது மாவட்டங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.



மொபைல் போன் கடைகள், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின்மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை இவையெல்லாம் இயங்கலாம்.
மாவட்டங்களில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள்,
வங்கிகள், ஏடிஎம்கள்,
ஆதரவற்றோர் இல்லங்கள் இவையெல்லாம் இயங்கலாம்.
கட்டுமானப்பணிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கும் கல்குவாரிகள், எம் சாண்ட், செங்கல் சூளைகள், கிரஷர்கள் இவற்றுக்கான போக்குவரத்து செயல்படலாம்.
பெரும் தொழிற்சாலைகளும், ஐஐடி நிறுவனங்களும் இந்த இரண்டு மட்டும் கட்டுமானப் பணிகளுக்கு ஒருவேளை மாவட்டத்தில் இருந்தால் மாவட்ட ஆட்சியர் , சென்னை பகுதியில் இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்று பிறகு வேலையை ஆரம்பிக்க வேண்டும்.
எது இயங்காது ?
மதுக்கூடங்கள் இயங்காது,
திரையரங்குகள்,
உயிரியல் பூங்காக்கள்,
நீச்சல் குளங்கள்,
விளையாட்டு அரங்குகள்,
உடற்பயிற்சிக் கூடங்கள் இவையெல்லாம் இயங்காது.
பள்ளிகள், கல்லூரிகள் ,
வழிபாட்டுத்தலங்கள்,
அனைத்து மத சார்ந்த கூட்டங்கள் இவையெல்லாம் நடக்கக்கூடாது
விமானம், ரயில், பொதுப்போக்குவரத்து,டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷ, தங்கும் ஹோட்டல்கள், ரிசார்டுகள் இவையெல்லாம் இயங்காது.
இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இவை அனைத்தும் குறிப்பிட்டுள்ளது. இந்த அனைத்து தளங்களும் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு பொருந்தாது என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளார்கள்

No comments:

Powered by Blogger.