Breaking

அரசுப்பள்ளிகளில் சுற்று சுவரில் ஓவியங்களால் அசத்தும் பட்டாம்பூச்சி குழு...






அரசுப்பள்ளிகளில் சுற்று சுவரில்
ஓவியங்களால் அசத்தும் பட்டாம்பூச்சி குழு...

அரசுப் பள்ளிகளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் எங்கள் பட்டாம்பூச்சி குழுவானது  80க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஓவியங்கள் வரைந்து வருகிறது.

அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு ஒன்றியம் கஞ்சம் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் கேட்டதன் பேரில் 14 10 2020 மற்றும் 15 10 2020 ஆகி இரண்டு  நாளில் இக்குழுவின் துணை ஒருங்கிணைப்பாளரான என்னுடன் இணைந்து எம் பட்டாம்பூச்சி களான கார்த்திகேயன் , நல்ல கணபதி,  ராஜ்கிருஷ்ணன் ,ஓவியர் இளங்கோ ஆனந்தன் ,நந்து கிஷோர், வெங்கடேஷ், மாஸ்டர் சச்சின் ஆகியோர் இணைந்து இப்பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறையில் ஓவியங்களால் அழகு படுத்தினோம்.
மே மாத விடுமுறையில் இப்பள்ளியை செய்ய திட்டமிட்டோம் ஊரடங்கு வந்தமையால் இப்பணி சற்று நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சிறிது தளர்வு ஏற்பட்டமையால் சமூக இடைவெளியுடன் பாதுகாப்புடனும் மீண்டும் எம் பட்டாம்பூச்சி குழுவானது இரண்டாவது பள்ளியாக ஓவிய பணி செய்ய ஆரம்பித்தோம்.
சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெகிழியை ஒழிப்பது மின்சேமிப்பு நீர் சேமித்தல் போன்ற விழிப்புணர்வு படங்களும், சுவரின்உட்புறத்தில் மாணவர்களுக்கு பிடித்தமான சோட்டா பீம், டோரா, மோட்டு பட்லு, தேசத்தலைவர்கள் மற்றும் விலங்குகள் உட்பட ஓவியங்கள் வரையப்பட்டது.

வகுப்பறையின் உட்புறத்தில் மாணவர்கள் பாட சம்பந்தமான
படங்களைப் பார்த்து எளிதில் நினைவு வைக்கும் வகையில்  பாடம் சார்ந்த  ஓவியங்கள் வரையப்பட்டது.
ஊரடங்கு தளர்வு முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் பொழுது இந்த ஓவியங்களை பார்த்து மகிழ்ச்சியுடனும் உற்சாகமாகவும் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என்பதற்காகவும் மற்றும் ஓவியங்களுடன் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இது போன்ற ஓவியங்கள் நாங்கள் விடுமுறை நாட்களில் வரைந்து வருகிறோம்.
சந்தோஷ் குமார் 
(ஆசிரியர் பாண்டியன் நகர் துவக்கப்பள்ளி)
துணை ஒருங்கிணைப்பாளர்
பட்டாம்பூச்சிகள்.

*பட்டாம்பூச்சிகள்*
*அரசு_பள்ளிகளை_காப்போம்*

*ஊரடங்கு இடையில் இரண்டாம் பள்ளி..........*


#திருப்பூர் மாவட்டம்
*#திருப்பூர்வடக்கு_ஒன்றியம்  கஞ்சம்பாளையம் ஊ.ஓ.துவக்கப்பள்ளியில்14.5.20 & 15.5.20  ல்  பள்ளியை வண்ணமயமாகிய எம் பட்டாம்பூச்சிகள்.*....


#கார்த்திகேயன்
#நல்ல கணபதி
#ராஜுகிருஷ்ணன்
#ஆனந்தன்
#ஓவியர்_இளங்கோ
#வெங்கடேஷ்
#நந்து கிஷோர்
#சச்சின்
இவர்களுடன் ஒருங்கிணைப்பில்....

#சந்தோஷ்குமார்(பாண்டியன்நகர்) 
#பட்டாம்பூச்சிகள்
#திருப்பூர்.

No comments:

Powered by Blogger.