Breaking

கோடைகாலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..





கோடைகாலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

கோடைகாலத்தில் தான் அதிகளவு ஃபுட் பாய்சனானது ஏற்படுகிறது. அதற்கு காரணம் பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி பரவுவதே ஆகும்.
கோடைகாலத்தில் துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பத்தில் துரித உணவுகளை சமைப்பதால் கிருமிகள் அதிகமாக மற்றும் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது.
குளிர்சாதனப்பெட்டி மற்றும் சமையலறை மூலமாக கிருமிகள் பரவுவதை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமானது. அதைப் பற்றி இங்கு காண்போம்.
சோடா உப்பு மற்றும் தண்ணீரை உபயோகித்து வாரம் ஒருமுறை குளிர்சாதனப்பெட்டியை துடைக்க வேண்டும்.
சமையலறையில் பயன்படுத்தும் துணிகளை அவ்வப்போது துவைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


இதன் மூலம் பூஞ்சைகள், கிருமிகள் உண்டாவதை தடுக்கலாம்.
சாப்பிடும் முன்பும், சமைக்கும் முன்பும் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

இறைச்சி போன்றவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும்போது, கவரில் போட்டு அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் கிருமிகள் பரவாமல் இருக்கும். இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் போது மற்ற உணவுகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அருகில் வைக்கக்கூடாது.
காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை வெட்டுவதற்கு தனித்தனி பலகை மற்றும் கத்தியைப் பயன்படுத்த வேண்டும். இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு பயன்படுத்த வேண்டும்.
கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான பொருட்களை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதன் மூலம் காற்றோட்டமின்றி கிருமிகள் எளிதாக உருவாக வாய்ப்பு உள்ளது.
கோடைகாலத்தில் இறைச்சி, முட்டை, பால் போன்ற உணவு பொருட்களை நன்கு சமைத்து உண்ண வேண்டும்.

No comments:

Powered by Blogger.