Breaking

இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிவோம்..





இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிவோம்..




மேஷம்

உங்களுக்கு இன்று திடீர் பணவரவு உண்டாகும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். சகோதரர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

தொழில் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம்.குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலையின் மீது கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடலாம்.

மிதுனம்

குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.

கடகம்

குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழில் தொடர்பான பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.தொழிலில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.


சிம்மம்

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் ஏற்படலாம். பணவரவு தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு.

கன்னி

நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நன்மை கொடுக்கும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும்.

துலாம்

குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். பொருளாதார தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. சகோதர சகோதரிகள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்வதால் நல்ல லாபத்தை பெற முடியும். குடும்பத்திலுள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


தனுசு

தொழிலில் தொடர்பாக புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம்

நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவை கொடுக்கும்.

கும்பம்

நீங்கள் சோர்வுடனும், மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை ஏற்படலாம். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் கவனம் தேவை. அறிமுகம் இல்லாத நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

மீனம்

குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக புதிய நபர்களை சந்திக்க நேரிடலாம் .

No comments:

Powered by Blogger.