Breaking

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பட்டியல் அனுப்ப உத்தரவு..






அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பட்டியல் அனுப்ப உத்தரவு..

அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை ஜூன் 6ஆம் தேதிக்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குனர் பணியாளர் பிரிவு எஸ் நாகராஜ முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை..


 அனைத்து அரசு நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி நிரப்ப தகுந்த பட்டதாரி இடை நிலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் ஜூன் 6-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பவேண்டும் இந்த விவரங்களை அனுப்பும்போது 1.8. 2019 தேதியிட்ட பணியாளர் நிர்ணயத்தின் படி ஆசிரியர் இன்றி உபரி என கண்டறிந்து இயக்குனரின் பொது தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்ட பணி இடங்களையும் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலி பணியிடங்கள் ஆக கருதக் கூடாது என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020- 21 வருடாந்திர தேர்வு கால அட்டவணை படி 730 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு பற்றிய அறிவிப்பு வரும் ஜூலை 9 ஆம் தேதியும், அதேபோல் 572 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Powered by Blogger.