Breaking

உடலில் வியர்வை நாற்றம் வராமலிருக்க அருமையான வழி.

உடலில் வியர்வை நாற்றம் வராமலிருக்க அருமையான வழி.!!

கோடைகாலம் வந்துவிட்டாலே வியர்வை அதிகமாக எரிச்சலை உண்டாக்கும். அவற்றிற்கு ஏற்ற அருமையான முறைகளை பற்றி காண்போம்.
கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும், இது இயல்பான ஒன்று தான். ஆனால் சில பேருக்கு இந்த வியர்வை அதிகமாகி ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலைமையை உருவாக்கி விடும். இன்னும் சில பேருக்கு அதிக வியர்வையால் உடல் அரிப்பு, வியர்க்குரு இவையெல்லாம் வர ஆரம்பித்துவிடும்.
இதை சரிசெய்வதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நன்னாரி வேர், வெட்டிவேர் இவையெல்லாம் கலந்த குடிநீரை குடிக்கவேண்டும். இளநீர், பதநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் இவையெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்.
சிலபேர் பார்த்தீர்கள் என்றால் இந்த துர்நாற்றம் போக வேண்டும் என்பதற்காக எதையாவது ஒரு செண்டு வாங்கி அடித்திருப்பார்கள்.
இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு நறுமணம் போய், வியர்வையின் நாற்றம் தான் இன்னும் அதிகமாகும். இன்னும் சில பேருக்கு அதிகமாக வியர்த்து அவர்கள் போட்டுக்கொண்டிருக்கும் சட்டையில் நுரை போல் அசிங்கமாக இருக்கும். இது போன்ற பிரச்சினையை ரொம்ப எளிமையில் தீர்த்துவிடலாம்.
* தினமும் இரவு படுக்கப் போவதற்கு முன்னாடி அப்பில்சேட்டர் வினிகரை அக்குள் பகுதியில் தடவி விட்டிர்கள் என்றால் அதிகமாக வியர்ப்பது குறையும்.
* துர்நாற்றம் வீசாது, நீங்கள் இரவு தூங்கும்பொழுது தடவவில்லை என்றால், காலையில் குளிப்பதற்கு முன்னாடி கூட இந்த இதை தடவிவிட்டு குளிக்கலாம். இருந்தாலும் இரவு பயன்படுத்தினால் தான் இதற்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
* பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, அதை அக்குளில் தடவி ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து, குளிர்ந்த தண்ணீரால் கழுவினால் அக்குளில் வியர்த்தது மட்டுமில்லாமல் துர்நாற்றமும் வராது.
* லவங்கம் இலை, கடுக்காய் இவையெல்லாம் வாங்கி அரைத்து உடலில் பூசி குளித்து வரலாம். சந்தனத்தை உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.
* பன்னீர் ரோஜாப்பூ அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் அதிகமான வியர்வை வருவது, துர்நாற்றம் குறையும்.
* சில பேருக்கு கோடைகாலங்களில் அதிகமாக வியர்த்து வேர்க்குரு வந்துவிடும். இவர்கள் தண்ணீரை அதிகம் பருகி வந்தால் சீக்கிரம் வியர்க்குரு மறையும்.
* ஆவாரம்பூ அரைத்து உடலில் பூசி அதன் பிறகு குளித்தால் இந்த வியர்வை துர்நாற்றம் இருக்காது. எலுமிச்சைக்கு வியர்வையை குறைக்கும் சக்தி உண்டு.
* அதற்கு எலுமிச்சை துண்டு அக்குளில் தேய்த்து குளிக்க வேண்டும், இதனால் வியர்க்குரு குறைவது மட்டுமல்லாமல் அந்த அக்குள் பகுதியில் இருக்கக்கூடிய கருமையும் குறைந்துவிடும்.
* உருளைக்கிழங்கை வெட்டி அதை அதிகமாக வியர்க்கும் பகுதியில் தேய்த்து வந்தால் வியர்வை நாற்றம் போய்விடும்.
* கொஞ்சம் சூடத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து வியர்வை அதிகமாக இருக்கும் பகுதிகளில் தடவி வந்தால் இந்த துர்நாற்றம் குறையும்.


* சில பேருக்கு உள்ளங்கையில் அதிகமாக வியர்க்கும் அப்படிப்பட்டவர்கள் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து அந்த கலவையை உள்ளங்கைகளில் தடவிக்கொண்டு வந்தாலே போதும்.
* கோடை காலங்களில் தினமும் திராட்சை வாங்கி சாப்பிடுங்கள், அது அதிக வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தும்.
கோடைகாலம் செய்யவேண்டியவை:

1. அதுமட்டுமில்லாமல் கோடை காலங்களில் காலை இரவு என இரண்டு வேளையும் அவசியம் குளியுங்கள்.
2. முடிந்தவரைக்கும் கோடைகாலத்தில் காட்டன் ஆடைகளை பயன்படுத்துவது நல்லது. இது வியர்வையை உறிஞ்சி அக்குளில் துர்நாற்றம் வீசுவதை தடுக்கும்.
3. கோடை காலத்தில் அதிகமான கார உணவுகளை சாப்பிடக் கூடாது. இது வியர்வையை அதிகரிக்கும். அதிக திரவ உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. அதுவும் குறிப்பாக அதிகம் வியர்வை உள்ள பிரச்சனை உள்ளவர்கள் குடைமிளகாய், பச்சை மிளகாய் இவையெல்லாம் சாப்பிடக்கூடாது.
5. சில பேருக்கு வெயில் காலம் மட்டும் இல்லாமல் எப்பொழுதுமே வியர்க்கும். இதற்கு காரணம் தைராய்டு ஹார்மோன் வேறுபாடு, அதிக கொழுப்பு, அஜீரண பிரச்சனை, மலச்சிக்கல், கல்லீரல் நோய் இவையெல்லாம்தான்.
அதனால் எந்த காலத்திலும் வியர்வை பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் மருத்துவரை அணுக வேண்டியது ரொம்ப முக்கியம்

No comments:

Powered by Blogger.