Breaking

பத்தாம் வகுப்பு தேர்வு தேதிகளை திரும்பப் பெற வலியுறுத்தல் தொடர்பாக... தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பொதுத் தேர்வை ரத்து செய்ய கூறி பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி, தமிழக அரசு பள்ளி கல்வி துறைக்கும் தமிழக முதல்வருக்கும் அனுப்பிய மின்னஞ்சல் ..

பத்தாம் வகுப்பு தேர்வு தேதிகளை திரும்பப் பெற வலியுறுத்தல் தொடர்பாக...
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பொதுத் தேர்வை ரத்து செய்ய கூறி
பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி, தமிழக அரசு பள்ளி கல்வி துறைக்கும் தமிழக முதல்வருக்கும்
அனுப்பிய மின்னஞ்சல் ..

பெறுநர்

உயர்திரு ஆசிரியர்

நாளிதழ்/ தொலைக்காட்சி

சென்னை.

அன்புடையீர்

வணக்கம்.

தமிழக அரசு 10 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.

கொரானா தொற்று  அதிகரித்து வரும் போது தேர்வு நடத்துவது பொருத்தமாக இருக்காது.

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பொதுத் தேர்வை ரத்து செய்ய கூறி
பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி, தமிழக அரசு பள்ளி கல்வி துறைக்கும் தமிழக முதல்வருக்கும்
அனுப்பிய மின்னஞ்சல் நகல் தங்களுக்கு அனுப்பி உள்ளார்.

தங்களது இதழில் செய்தி வெளியிட்டு உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி.

MJ. Prabakar
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்
மாநில அலுவலகம்
சென்னை.

---------- Forwarded message ---------
From: Tnsf Statecenter <tnsfstatecenter@gmail.com>
Date: Tue, 12 May, 2020, 4:14 pm
Subject: 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய கோருதல்


பெறுநர்:

மாண்புமிகு. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்,
தமிழ் நாடு அரசு,
சென்னை.

அய்யா,

பொருள்: பத்தாம் வகுப்பு தேர்வு தேதிகளை திரும்பப் பெற வலியுறுத்தல் தொடர்பாக...

       கொரானா தொற்று பரவலைத் தொடர்ந்து பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டது. ஊரடங்கு மற்றும் பொது முடக்கு காரணமாக மக்கள் சொல்லொணா துன்பத்தில் ஆழ்ந்து வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

 உணவு, வேலை இல்லாமல் பெரும் துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர். 

      பல்கலைக்கழக மானியக் குழு கூட மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம்  குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்வேறு சலுகைகளோடு  தேர்வுகளை நடத்திட ஓர் வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழகங்களுக்கு  வழங்கியுள்ளது.

அதில் அகமதிப்பீட்டு முறையை 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு கணக்கில் கொள்ளலாம். மீதம் உள்ள 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு   முந்தைய பருவத் தேர்வு உட்பட பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மேலும் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

இத்தகைய தேர்வுகளை நடத்திட  ஜூலை மாதத்தையே அது பரிந்துரை செய்துள்ளது. 

     ஆனால் கொரானா தொற்று தொடர்ந்து ஏறு முகமாக இருக்கும் இந்த நேரத்தில்  பத்தாம் வகுப்பிற்கு   பொதுத் தேர்வு என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல மாநிலங்களிலும் தேர்வுகள் பற்றிய திட்டமிடுதல் இல்லை.

 மத்திய தேர்வு வாரியம் கூட இன்னும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் பற்றி அறிவிக்க வில்லை. இந்த நிலையில் தமிழ் நாடு முந்திக் கொண்டு தேர்வுகளை அறிவிப்பது எந்த இலக்குகளை அடைய ?

 மக்களுக்கு கூற தமிழ் நாடு அரசு கடமைப் பட்டுள்ளது. 

 கொரானாவின் தாக்குதல்,  அச்சம்,  பீதி, நிச்சயமற்ற நிலை, பெற்றோர்கள் வருவாய் இழப்பு  போன்ற வற்றின் ஊடாக தேர்வுகள் பற்றியே சிந்திக்க முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். இது போன்ற சூழ் நிலையின்  காரணமாக செய்வது அறியாது நிற்கும் பெற்றோர் மாணவர் மனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

     எனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை  உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

 பல்கலைக்கழக மானியக் குழு ஓர் நிபுணர் குழு அமைத்து அதன் அடிப்படையில் முடிவு செய்ததைப் போன்று,

 பள்ளிக் கல்வித் துறை ஓர் நிபுணர்கள் குழு அமைத்து அதன் முடிவுகள்படி பத்தாம் வகுப்பு தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கோவிட் 19 - க்காக பள்ளி மூடியதில் இருந்து அரசு பள்ளி  மாணவர்களுக்கு, பள்ளிகளில் வழங்கப்படும் தேர்வுக்கான பயிற்சி எதுவும் வழங்கப்படவில்லை.

 ஆனால் தனியார் பள்ளிகள் ஆன் லைன் உள்ளிட்ட பிற பயிற்சிகளை வழங்கி வருகின்றன.இந்த சூழ்நிலையில் அரசு - தனியார் பள்ளி  படிப்பில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இது சமத்துவ தேர்வு முறைக்கு எதிரானது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு கோவிட் 19 குறித்து விழிப்புணர்வு எவ்வளவு தூரம் ஏற்பட்டுள்ளது என்பதும் கேள்விக்குறியே. 

இச் சூழலில் அவர்கள் பாதுகாப்பு முறைகளைக் கையாளுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

மேலும் சமீபத்திய பிரதமர் , முதலமைச்சர்கள் கலந்துரையாடலில் ரயில், பஸ் போக்கு வரத்தை மே31 வரை நிறுத்தி வைக்கும்படி கூறியுள்ளார். 

அப்படி இருக்கும் போது மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் கணக்கில் கொள்ளாமல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 மாணவர்களுக்கு உடல் நலப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தேர்வுகளைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,

எஸ். சுப்ரமணி
மாநில பொதுச் செயலாளர்,
 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் .


நகல்:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
சென்னை

No comments:

Powered by Blogger.