Breaking

புதினா பற்பொடி:..பற்பொடி தயாரிக்கும் முறை.






புதினா பற்பொடி:

பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் புண், ஈறுகளில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு, வாயில் ஏற்படும் துர்நாற்றம் என பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி அலைபவர்கள் நம்மில் பலருண்டு. 

புதினா பற்பொடியை வீட்டிலேயே தயாரித்து  மேற்கூறிய அத்தனை பிரச்சனைகளுக்கும் எளிய முறையில் தீர்வு காணலாம். 

பற்கள் மற்றும் ஈறுகளில்  பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் இந்த பற்பொடியை உபயோகிக்கலாம்.
பற்பொடி தயாரிக்கும் முறை. 



புதினா இலைகளை கிள்ளி சுத்தம் செய்து வெய்யிலில் நன்றாகக் காய வைத்து, எட்டில் ஒரு பங்கு கல் உப்பை சேர்த்து உரல் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பின் 
மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் அவதிப்பட மாட்டார். பற்கள் கறைகள் நீங்கி பளிச்சென்று பிரகாசிக்கும்.

புதினா பற்பொடியை வீட்டிலேயே செய்து அனைவரும் நலம் பெற வேண்டுகிறேன்.

No comments:

Powered by Blogger.