Breaking

இறப்புவரை (until death) நகங்களும் (Nails),முடிகளும் (Hairs) தொடர்ச்சியாக வளர்வதேன்





🔥அறிவியல்-விளக்கம்🔥

💐இறப்புவரை (until death) நகங்களும் (Nails),முடிகளும் (Hairs) தொடர்ச்சியாக வளர்வதேன்💐

🏵பதில்🏵

👉நகங்களை உருவாக்கும் நகத்தின் மேட்ரிக்ஸ் (nail matrix) மற்றும் முடிகளை உருவாக்கும் மயிர்க்கால்கள் (follicles) ஆகியவை இரண்டும் எபிடேலியல் செல்களால் (epithelial cells) உருவாக்கப்பட்டவை.
இவையே கெரட்டின் (keratin) எனப்படும் கடினமான புரதத்தால் நகங்கள் மற்றும் முடிகளை உருவாக்குகிறது.
👉 எபிடேலியல் செல் ஊட்டச்சத்தைப் பெறும் வரை  நகங்களும், முடிகளும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

🏵விளக்கம்🏵

👉நகங்களும், முடிகளும் அடிப்படையில் கெரட்டின் எனப்படும் கடினமான பாதுகாப்பு புரதத்தால் ஆனவை.
👉முடியானது மயிர்க்கால்களில் இருந்தும், நகங்களானது நகத்தின் மேட்ரிக்ஸிலிருந்தும் வளர்கிறது.
👉மயிர்க்கால்கள் மற்றும் மேட்ரிக்ஸில் உள்ள எபிடேலியல் செல்கள் பெருகும் போது,பழைய செல்கள் தோல் வழியாக மேலே தள்ளப்படுகின்றன. இதனால் இவை இறந்து கடினப் படுத்தப்படுகின்றன.
இவையே முடி அல்லது நகங்களாக மாறுகிறது.
👉 கெரட்டினிஷேசன் (keratinisation) எனப்படும் இந்த செயல்முறை நம் தலைமுடி மற்றும் நகங்களை வளர வைக்கிறது.
🏵முடி (Hair)🏵
👉தலையில் உள்ள முடி பார்ப்பதற்கு அழகை மட்டும் தருவதில்லை.இது வெப்பத்தை தக்க வைப்பதன் மூலம் உடலை வெப்பமாக (warmer) வைத்துக் கொள்ள உதவுகிறது.
👉மனித உடலின் உள்ளங்கை,பாதம், உதடு தவிர மற்ற அனைத்து பாகங்களிலும் முடி வளர்கிறது.


🏵நகங்கள் (nails)🏵

👉நகங்களானது விரல்கள் (fingers) மற்றும் கால்விரல்களின் (tip of toe) நுனியை காயத்திலிருந்து பாதுகாக்கின்றன.
👉சிறிய பொருள்களை எடுக்க நகங்கள் உதவுகின்றன.
👉நகங்கள் ஒரு நபரின் பொது ஆரோக்கியத்தின் குறிகாட்டியாக (indicator) இருக்கிறது.
1)வெளிர்நிற நகங்கள் (pale nails)-இரத்த சோகை,ஊட்டச்சத்து குறைபாடு
2)வெள்ளைநிற நகங்கள்-கல்லீரல் பிரச்சனை,ஈரல் அழற்சி நோய் (Hepatitis)
3)மஞ்சள்நிற நகங்கள் - பூஞ்சை தொற்று,தீவிர தைராய்டு பிரச்சனை,நீரழிவு நோய்
4)நீலநிற நகங்கள்-உடல் போதுமான அளவு ஆக்ஸிஜனை பெறவில்லை என்ற அறிகுறி,நுரையீரல் பிரச்சனை.

🔥மேலும் அறிக🔥

👉நகங்களும்,முடிகளும்  குளிர்காலத்தைவிட கோடைகாலத்தில் வேகமாக வளர்கின்றன.இரவு நேரத்தைவிட பகலில் வேகவாக வளர்கின்றன. ஏனெனில் வெப்பமான நேரங்களில் இரத்த ஓட்டம்,இரத்த தூண்டல் அதிகமாக உள்ளது.

🙏நன்றி
💐💐

No comments:

Powered by Blogger.