Breaking

உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்...* *World lupus day 2020. _ஷே.ஜாகீர் உசேன்_ .






*உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்...*

*World lupus day ..*

May 10

👉 உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் ஆண்டுதோறும் மே 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

👉 இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும், எலும்புகளையும் தாக்குகிறது.

👉 தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமித்தொற்று, உணவுப்பழக்கம் போன்ற காரணங்களாலும், மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.

👉 ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். 

👉 தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

_ஷே.ஜாகீர் உசேன்_

No comments:

Powered by Blogger.