Breaking

இன்றைய ராசி பலன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.. 02-06-2020,வைகாசி 20, செவ்வாய்க்கிழமை.






இன்றைய ராசி பலன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்..

02-06-2020,வைகாசி 20, செவ்வாய்க்கிழமை.

இராகு காலம் மதியம் 03.00-04.30

எம கண்டம் காலை 09.00-10.30

குளிகன் மதியம் 12.00-1.30.



மேஷம்

உங்களுக்கு இன்று காலையிலேயே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உத்தியோகத்தில் புதிய நட்பு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன்கள் குறையும். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.

ரிஷபம்

வியாபாரத்தில் புதிய நண்பர்களின் சேர்க்கையால் லாபம் அதிகரிக்கும்.எந்த செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்

பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். தெய்வ வழிபாடு நல்லது. நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பாதிப்பு அதிகம் இருக்காது.

கடகம்

தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் பலன் உண்டு. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் செய்யும் சூழ்நிலை உருவாகலாம். மனைவிவழி உறவினர்கள் மூலம் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.


சிம்மம்

உடன் பிறந்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெற்று சந்தோஷம் அதிகரிக்கும். செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் வெளிவட்டார நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்

பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகலாம். பழைய கடன்கள் தீரும் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மனக்கசப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பூர்விக சொத்துகளால் அனுகூலம் உண்டு. பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் உண்டாகும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும்.


தனுசு

குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலன் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்

நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்த படி செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயலில் கவனம் வேண்டும். குடும்பத்திலிருந்த மனக்குழப்பங்கள் நீங்கும்.

மீனம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

No comments:

Powered by Blogger.