Breaking

10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில்






10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்.! அதிர்ச்சியில் மாணவர்கள்.!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைத்து அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.

மேலும், பதினோராம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு தருவதாகவும் தமிழக அரசு அறிவித்தது. இந்த சூழ்நிலையில், ஜூன் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்கவுள்ளதாக அறிவிப்பட்ட நிலையில், தேதிகள் நீட்டிப்பு செய்து ஜூன் 15 ஆம் தேதி தேர்வுகள் நடத்துவதாக தமிழக அரசு அறிவித்தது.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.


மேலும், மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும் என்றும், வருகை பதிவேட்டின் அடிப்படையில் 20 விழுக்காடு மதிப்பெண்ணும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடரும் சிக்கல். பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்ய தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் நிலை என்ன? விதிமுறைகள் வெளியிடப்படாததால் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை பல பள்ளிகள் தற்போது நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Powered by Blogger.