Breaking

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு- மீண்டும் ஆலோசனை.!





10-ம் வகுப்பு பொதுத்தேர்வு- மீண்டும் ஆலோசனை.!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு..? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.