Breaking

ஒரே வகையான மாவில் 10 வகை பஜ்ஜிகள் செய்வது எப்படி..





ஒரே வகையான மாவில்
10 வகை பஜ்ஜிகள் செய்வது எப்படி..

தேவையான பொருட்கள் :

பச்சரிசி         :      400 கிராம்

உளுந்தம் பருப்பு     :  100 கிராம்

உப்பு       :  தேவையானளவு

வற்றல்        :     4 

காயம்        :     சிறிதளவு

பஜ்ஜி பொடி        :    1 சிட்டிகை

செய்முறை :

அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக நனைய வைக்கவும்.

அரை மணி நேரம் நனைத்த பின் பருப்பை இட்லிக்கு ஆட்டுவது போல் நன்றாக ஆட்டி எடுக்கவும். பின் அரிசியை ஆட்டும் போது வற்றல் , காயம்,  உப்பு சேர்த்து நன்றாக ஆட்டி பஜ்ஜி பொடியையும்,  உளுந்து மாவையும் சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு அதிகம் கெட்டியாக இல்லாமலும் இறுக்கமாக இல்லாமலும் இருக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்த பின், வாழைக்காய் , கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், குடமிளகாய், அப்பளம் செய்யப்பட்டதை வாழைக்காய் சீவும் உதவியால் வேட்டி மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் சுட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் பஜ்ஜி மெதுவாக இல்லாவிட்டால் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கொள்ளவும். ரொட்டியையும் பஜ்ஜி மாவில் தோய்த்து ரொட்டி பஜ்ஜி சுடலாம்.

No comments:

Powered by Blogger.