Breaking

இன்றைய ராசிப்பலன் - 11.06.2020 வைகாசி 29, வியாழக்கிழமை.







இன்றைய ராசிப்பலன் - 11.06.2020
வைகாசி 29, வியாழக்கிழமை.

இராகு காலம் - மதியம் 01.30-03.00

எம கண்டம்- காலை 06.00-07.30

குளிகன் காலை 09.00-10.30.


மேஷம்

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் நீங்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் புதுப் பொலிவுடனும், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சிலருக்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்

வியாபாரத்தில் மந்தமான நிலையே காணப்படும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் செலவுகள் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

இன்று மனம் அமைதி குறையலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கால தாமதம் உண்டாகலாம். வியாபாரத்தில் பெரிய தொகை முதலீடு செய்வதை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை. எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.



சிம்மம்

உடல் நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்கள் தீரும்.

கன்னி

பிரச்சனைகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக பயணங்களால் அனுகூலம் உண்டு. .

துலாம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் உண்டாகும். வீண் செலவுகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

விருச்சிகம்

உங்களுக்கு பொருளாதாரம் தொடர்பாக நெருக்கடிகள் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் மன நிம்மதி குறைவு ஏற்படலாம். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.



தனுசு

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். சகோதரர்களால் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வருமானம் இரட்டிப்பாகும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மகரம்

இன்று ஆரோக்கியம் தொடர்பாக பலவீனமாக காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம்

தொட்ட காரியம் வெற்றியைக் கொடுக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். சுபச் செலவுகள் உண்டாகும்.

மீனம்

சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படலாம். மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு சுமாராக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு.

No comments:

Powered by Blogger.