Breaking

இன்றைய ராசி பலன்கள்... 19-06-2020, ஆனி 05, வெள்ளிக்கிழமை





இன்றைய ராசி பலன்கள்...
19-06-2020, ஆனி 05, வெள்ளிக்கிழமை.

இராகு காலம் - பகல் 10.30-12.00

எம கண்டம்- மதியம் 03.00-04.30

குளிகன் காலை 07.30 -09.00.

நாளைய ராசிப்பலன் - 19.06.2020

மேஷம்

குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம், பூர்வீக சொத்துகளால் அலைச்சல் ஏற்பட்டாலும், அனுகூல பலன் உண்டு. உறவினர்கள் வழியாக தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதால் லாபத்தை பெற முடியும்.

ரிஷபம்

உறவினர் வழியில் சுபச் செலவுகள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

மிதுனம்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற செலவுகளால் சேமிப்பும் குறையும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

இல்லம் தேடி இனிய செய்திகள் வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக இருக்கும். தொழிலாளர்கள் ஒத்துழைப்பால் நன்மை உண்டு.


சிம்மம்

எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. சொத்து தொடர்பாக வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகள் நட்புடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் திடீரென்று சுபச்செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினைகள் நீங்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு.


தனுசு

எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழிலில் நண்பர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மகரம்

உங்கள் செயல்களில் தடைகள் ஏற்படும். மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகலாம், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும்.

கும்பம்

எந்த விஷயத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் ஓரளவு உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் மன உளைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டு.

மீனம்

பணவரவு சிறப்பாக இருக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

No comments:

Powered by Blogger.