Breaking

இன்றைய (20-06-2020) ராசி பலன்கள் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி






இன்றைய (20-06-2020) ராசி பலன்கள்

ஜூன் 20, 2020
ஆனி 06 - சனி

மேஷம்

 சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

ரிஷபம்

 நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும். தேவையில்லாத சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மிதுனம்

உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



கடகம்

 நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உறவினர்களின் வழியில் ஓரளவு அனுகூலம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சிம்மம் 

தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். பொதுக் காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


கன்னி

 புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் இலாபம் கிடைக்கும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

துலாம்

 கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத்தடங்கல்கள் உண்டாகலாம். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


விருச்சகம்

 சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



தனுசு

 உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். வராத கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகரம்

புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணி செய்யும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எண்ணிய பலன்கள் உண்டாகும்.  பூர்வீக சொத்துக்களால் நன்மை ஏற்படும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


கும்பம்

 காரியத்தடைகள் நீங்கி எண்ணிய வெற்றி கிடைக்கும். முதலாளி மற்றும் தொழிலாளிக்கு இடையே சாதகமான சூழல் அமையும். பயணங்களால் கீர்த்தி உண்டாகும். உறவுகளின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


மீனம்

 எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பணப்பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும். அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

No comments:

Powered by Blogger.