புதிய உச்சத்தை எட்டியது 2020ம் ஆண்டு கோடை வெப்பம்..!
புதிய உச்சத்தை எட்டியது 2020ம் ஆண்டு கோடை வெப்பம்..!
உலகெங்கிலும் வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனாலேயே வருடாவருடம் கோடை காலங்களில் அதீத வெப்பம் நம்மை வாட்டி வதைக்கிறது. மனித இனம் செய்யும் பல அலட்சியங்கள் மற்றும் தவறுகளால் இந்த வெப்பமயமாதல் இயற்கையை பதம் பார்க்கிறது. 2020ம் ஆண்டு கோடை வெப்பம் தற்போது புதிய உச்சத்தை எட்டி உள்ளது.வெப்பமண்டலப் பகுதியான சைபீரியாவில் இந்த கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது உலக வெப்ப சராசரியை சீர் செய்ய உதவியுள்ளது என ஜியாலஜிஸ்டுகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் கோபர்னிகஸ் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி அமைப்பு இதனை உறுதி செய்துள்ளது. 1979ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஜனவரி முதல் மே வரை வெப்பம் அதிகமாக உள்ளது.
இதனை நாசாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. 1981-2010ம் ஆண்டு வரை இல்லாத அளவுக்கு கடந்த மே மாதம் உலகளவில் சராசரி வெப்பத்தைக் காட்டிலும் 0.63 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது. ஏசி பயன்பாடு, தொழிற்சலை மற்றும் வாகனப் புகை அதிகரிப்பு காரணமாக குளோபல் வார்மிங் அதிகரித்து வருகிறது. இதனாலேயே கோடை காலத்தில் சுட்டெரிக்கும் சூரியன் மேலும் உக்கிரத்தை காட்டுவதாக விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.
வாகனம் மற்றும் தொழிற்சாலை மாசுவைக் கட்டுப்படுத்துதல்தான் இதற்கு ஒரே தீர்வு. சைபீரியா, அலாஸ்கா மற்றும் உலகின் இயற்கை குளிர்சாதனப் பெட்டி எனப்படும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளை பாதுகாப்பதே வெப்பத்தை கட்டுக்குள் வைத்து கடல் மட்டம் உயராமல் காக்கும். கடலில் எண்ணெய்க் கப்பல் விபத்துகள் ஏற்பட்டு எண்ணெய் கொட்டுதல், கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுதல் உள்ளிட்டவையும் வெப்பம் அதிகரிக்க மறைமுக காரணிகள் ஆகின்றன. கோபர்நிகஸ் ஆராய்ச்சி நிலையத்தில் ரீ அனலிஸிஸ் முறை மூலம் தற்போது நொடிக்கு நொடி உலகின் பல நாடுகளின் வெப்ப மாறுதல்களைக் கணக்கிடுவது சாத்தியமாகிறது.
இதன்மூலம் உலகின் எந்தெந்த நாடுகளில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கிறது என துரிதமாக கண்டறிந்து அங்கு மாசுவை குறைக்க வழிவகை செய்யப்படுகிறது. வெப்பம் அதிகமாக உள்ள பூமத்திரேகை அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பில் கூட சில நேரங்களில் தண்ணீர் குளுமை அடையும். இதற்கு லா நினா என்று பெயர். 2016ம் ஆண்டு லா நினா குறைந்து வெப்பம் அதிகரித்தது.
அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து 2020ம் ஆண்டு வெப்பம் அதனை முந்திவிட்டது. இந்த ஆண்டு மே மாதம், ஹவாய் தீவில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு ஒரு மில்லியனுக்கு 414.7 பகுதி என்ற அளவில் பதிவாகி உள்ளது. அது கடந்த 30 மில்லியன் ஆண்டுகளாக ஏற்படாத அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆஃப்ரிக்காவில் மனித குலம் தோன்றிய காலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அந்த அளவு இருந்துள்ளது. அதன்பின்னர் தற்போது இந்த அளவை எட்டி உள்ளது
No comments: